Sunday, May 27, 2012

visit my new blog - எனக்கு பிடித்த கதைகள்

Dear friends

I started uploading collected stories from various source. Recommend to your christian friends. They can use this to edify their personal life and spiritual life.

www.salomechristo.blogspot.com

In His ministry
Dr.Christo Selvan

ஊழியத்தின் பாதையில்

சார்லஸ் டெம்பிள் டான் என்ற பெயரை கேட்டவுடன் யாரேனும் உங்களுடைய ஞாபகத்திற்கு வருகிறார்களா, அதற்கு வாய்ப்பில்லை. ஆனால் பில்லி கிரஹாம் என்றவுடன் உங்களுக்கு அநேகமாக தெரிநதிருக்கும், இன்று உலகப்புகழ் பெற்று விளங்கும் பில்லி கிரஹாமும், சார்லசும் இளவயது நண்பர்கள். 1945ல் நடைபெற்ற ஒரு கிறிஸ்தவ வாலிபர் கூட்டத்தில் நண்பர்கள் ஆனார்கள். பின் இவர்கள் இருவரும் சேர்ந்து ஐரோப்பா முழுவதும் பிரயாணம் செய்து சுவிசேஷ கூட்டங்கள் நடத்தினர். பின் நாட்களில் இந்த சார்லஸ் 1200 பேர் கொண்ட ஒரு சபையை தனி மனிதனாக உருவாக்கினார். அந்நாட்களில் அநேகர் பில்லி கிரஹாமை விட சார்லஸ்தான் மிக வல்லமையான ஊழியராக வருவார் என கருதினார்கள்.
.
இப்படி வல்லமையாக ஊழியம் செய்த சார்லஸ் வாழ்வில் திடீரென ஓர் பெரிய மாற்றம் ஏற்பட்டது. அதற்கு காரணம் வாழ்க்கை என்ற மாதப்பத்திரிக்கையே ஆகும். அதில் வட ஆப்ரிக்காவில் நிலவிவரும் கடும் பஞ்சத்தை குறித்த புகைப்பட செய்தி வெளியாயிருந்தது. அதில் ஒரு நீக்ரோ பெண்மணி பஞ்சத்தால் இறந்த ஒரு குழந்தையை கையில் வைத்தவாறு வானத்தை அண்ணாந்து பார்ப்பது போல படமிருந்தது, இந்த படத்தை பார்த்த சாலஸ்க்கு ஒரு சந்தேகம் எழும்பலாயிற்று. அன்பு நிறைந்த தெய்வம் இந்த உலகில் இருந்தால் மழை இல்லாமல் இந்த குழந்தை இறக்க நேரிடுமா? இந்த தாயின் வேதனையை அவர் அறிந்திருந்தாரானால் நிச்சயம் இது நடக்காது என்ற சிந்தனை உருவானது. அவரது வலுவான விசுவாசம் மிகுந்த ஆட்டம் கண்டது. அநேக கேள்விகளால் குழப்பப்பட்டு விசுவாசத்தை முற்றிலும் இழந்து ஊழியத்தை விட்டு விலகலானார். அதோடு பில்லி கிரஹாமையும் தேவனை நம்புவது மடத்தனம் என்றார். ஆனால் அவரோ கேள்வி அநேகம் இருந்தாலும், தன் விசுவாசத்தை காத்து கொணடு கிறிஸ்துவுக்குள் நிலைத்திருந்தார். சார்லஸோ தீவிர நாஸ்திகவாதியாகி, அதன் கொள்கையை தனது நாவல்களிலும் புத்தகங்களிலும எழுத ஆரம்பித்தார்.

ஊழியத்தின் பாதையில்

ஒரு வயதான மிஷனெரி தம்பதிகள் ஆப்பிரிக்காவில் தங்கள் ஊழியத்தை பல வருடங்கள் செய்து முடித்து விட்டு, தங்கள் சொந்த தேசமாகிய அமெரிக்காவிற்கு திரும்பிக் கொண்டிருந்தனர். அவர்கள் சுகத்தை இழந்து, எந்த வித சொத்தோ, பென்ஷனோ எதுவும்இன்றி, சோர்வோடு ஒருக் கப்பலில் வந்துக் கொண்டிருந்தனர். அதே கப்பலில், அமெரிக்க அதிபர் டெட்டி ரூசிவெல்ட், (Teddy Roosevelt) தனது விடுமுறை நாளில், ஆப்பிரிக்கா சென்று வேட்டையாடி, முடித்து விட்டு, தனது சொந்த தேசத்திற்கு திரும்புவதற்காக, பிரயாணம் செய்ததை அப்போது தான் கண்டனர்.
.
இந்த தம்பதிகளை யாரும் கண்டுக் கொள்ளவில்லை. ஆனால் அதே சமயம் அமெரிக்க அதிபரைக காண சகப்பிரயாணிகள் மிகவும் பிரயத்தனம் பண்ணிக் கொண்டிருப்பதையும், அவருக்கு அளிக்கப்படும் மரியாதைகளையும் இந்த தம்பதியினர் கண்டபோது, அந்த மிஷனெரி தம் மனையிடம், ‘நாம் ஏன் இப்படி நமது வாழ்வை ஆப்பிரிக்காவில் கஷ்டப்பட்டு ஊழியம் செய்திருக்கவேண்டும்? யாரும் நம்மை கண்டுக் கொள்வில்லை. இதோ இந்த மனிதர், ஏதோ வேட்டையாடிவிட்டு திரும்பி போய்க் கொண்டிருக்கிறார்; அவருக்கு கொடுக்கப்படும் மரியாதையும் கனமும் எத்தனை!’ என்று மனம் கசந்துக் கொண்டார். அப்போது மனைவி ‘இல்லை, நீங்கள் இப்படி சொல்லக் கூடாது’ என்றுக் கூறினார். அதற்கு மிஷனெரி, ‘இல்லை என் மனது பொறுத்துக் கொள்ள மறுக்கிறது’ என்றுக் கூறினார்.
.
கப்பல் கரையை சேர்ந்தவுடன், அதிபரை வரவேற்க பெரும் கூட்டம் காத்திருந்தது. மக்கள் திரள் கூட்டமாய், கொடிகளை உயர்த்தியபடி, அவரை வரவேற்க கூடி வந்திருந்தனர். பாராளுமன்ற உறுப்பினர்களும், பெரிய பதவியிலிருப்பவர்களும் அவருக்கு கைகொடுத்து, வரவேற்றனர். ஆனால் இந்த தம்பதியினரை வரவேற்க ஒரு ஈ காக்கைகூட இல்லை. அவர்கள் அந்த கப்பலிலிருந்து, இறங்கி, வெளியே வந்து, பக்கத்தில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து, அடுத்த நாள் முதல் சாப்பிடுவதற்கு என்னச் செய்யலாம் என்று யோசித்துக் கொண்டிருந்தனர். அன்று இரவு அந்த மிஷனெரி இருதயம் உடைந்தவராய், மனைவியிடம், ‘கர்த்தர் பட்சபாதம் உள்ளவர், ஏன் நமக்கு இப்படி’ என்று புலம்ப ஆரம்பித்தார். அப்போது மனைவி, ‘நீர் ஏன் உள்ளேப் போய் கர்த்தரிடமே இதைக் கேட்கக்கூடாது’ என்றுக் கூற, அவர் போய் ஜெபிக்க உள்ளேச் சென்றார்.
.
சற்று நேரம் கழித்து. அவர் வெளியே வந்தபோது அவர் முகம் தெளிவாக இருப்பதைக் கண்ட அவர் மனைவி, ‘என்னப்பா? என்ன நடந்தது?’ என்றுக் கேட்டார். அதற்கு அவர், ‘நான் கர்த்தரிடம், நான் எவ்வளவு கசந்துப் போனேன், அமெரிக்க அதிபர் வீட்டுக்கு வந்தபோது அவருக்கு கிடைத்த வரவேற்பிற்கும், எனக்கு கிடைத்த வரவேற்பிற்கும் உள்ள வித்தியாசத்தை அவரிடம் சொல்லி, முறையிட்டேன். அப்போது கர்த்தர் என்தோளைச் சுற்றி தம் கரத்தை வைத்து அணைத்தவராக, ‘இன்னும் நீ வீடு வந்துச் சேரவில்லையே’ என்று கூறினார், என் துக்கம் கசப்பு எல்லாம் பறந்து போய் விட்டது என்று குதூகலத்தோடுக் கூறினார்

Dear heartbeats

hi,
I welcome you to my world
have a nice time with me
you can search, enjoy some video's, read blogs and more
enjoy.
have a blessed time my dear


Christo
(the heart hijacker for Christ)