பிரசித்திப் பெற்ற ஊழியக்காரனான ஆஸ்வால்ட்
ஸான்டர்ஸ் (J.Oswald Sanders) தாம் எழுதிய A spiritual Clinic என்னும் தமது புத்தகத்தில்
நியூயார்க் நகரத்தில் இருந்த இரண்டு குடும்பங்களின்
தலைமுறைகளின் வரலாற்றை ஒப்பிட்டு பார்த்து, அவர் ஒரு
விசேஷித்த காரியத்தை கீழ்கண்டவாறு கண்டறிந்தார்.
.
முதலாவது குடும்பம் மேக்ஸ் ஜூக்ஸ் (Max Jukes)..அவர் கடவுள் பக்தியில்லாதவராக, துன்மார்க்க
ஜீவியம் செய்தவராக இருந்தார். அவர் மணந்த பெண்ணும் ஒரு
கொள்கையில்லாதவளாய் கடவுள் பயம் இல்லாதவளாக இருந்தாள்.
அவர்களுடைய தலைமுறைகளில் வந்தவர்களில் 1200 பேரை வைத்து
கணக்கெடுக்கப்பட்டது. அதில் 310 பேர் மிகவும் ஏழ்மையான
நிலையில் ஒரு வீடும் வேலையும் இல்லாமல் கஷ்டமான நிலையில்
இருந்ததாக கூறப்படுகிறது. அதில் 440 பேர் தங்களது
ஒழுக்கமில்லாத வாழ்க்கையினால் தங்கள் சரீரங்களில்
வியாதிகளை வரவழைத்துக் கொண்டார்கள். ஒருவருக்கு 13 வருடம்
வீதம் 130 பேர் தங்களது துஷ்ட நடவடிக்கைளினால் சிறைக்கு
அனுப்பபட்டார்கள். 100 பேர் குடியர்களாகவும், 60 பேர்
திருடர்களாகவும், 190 பேர் விபச்சாரிகளாகவும் இருந்தனர்.
இவர்களது இந்த நிலையினால் அரசாங்கத்துக்கு 1,500,000 டாலர்கள்
வீண் செலவு விரயமானது.
.
அடுத்த குடும்பம் ஜோனத்தான் எட்வர்ட் (Jonathan Edward) குடும்பம். அவர் தேவனுடைய மனிதனாக
கர்த்தருக்கு உண்மையாக ஊழியம் செய்தவர். அவர் மணந்த
பெண்ணும் கர்த்தருக்கு பயந்தவர்கள், ஊழிய அழைப்பு
பெற்றவர்கள். அவர் குடும்பத்தில் வந்த தலைமுறையில் 300
பேர் போதகர்களாகவும், மிஷனெரிகளாகவும், வேதாகம
கல்லூரியில் பேராசிரியர்களாகவும் திகழ்ந்தார்கள். 100
பேர் பேராசியர்களாகவும், 100 பேர் சிறந்த வக்கீல்களாகவும்,
30 பேர் நீதிபதிகளாகவும், 60 பேர் வைத்தியர்களாகவும், 14 பேர்
கல்லூரிகளில் துணை முதல்வர்களாகவும் ஒருவர்
பாராளுமன்றத்தில் துணை ஜனாதிபதியாகவும் இருந்தனர்.
அநேகர் அவரது குடுமபத்திலிருந்து நல்ல செல்வாக்கு
மிக்கவர்களாகவும், நாட்டில் உயர்ந்த நிலைகளில்
இருந்ததாகவும் கணக்கெடுப்பு கூறுகிறது. அவர்களது
குடும்பத்தினால் அரசாங்கத்திறகு மிகுந்த வரவு
வந்ததென்று குறிப்புகள் கூறுகின்றன.